தொண்டு செய்யுங்கள்! இறை நிலை அடையலாம்! கிராமத்து மாணவர்களை சர்வதேசத் திறமையாளர்களாக மாற்றும் திருத்தொண்டர்!
திறமையால் வேறுபடுவதேயன்றி தி பிறப்பால் அனைவரும் சமமே! நாம் எதற்காகப் பிறந்தோம் என்று சிந்தித்தது உண்டா! சிந்தித்திருந்தால் விடை கிடைத்து இருக்கும். நம்மை உணர்ந்து கொள்ளவே இந்த பிறப்பு. எல்லா உயிரிடத் திலும் கருணை கொண்டு வாழ்ந்து பிறப்பிலா பெருமையைக் கொள்ளவே இந்த பிறப்பு என்கின்றன புனித நூல்கள். அதன்படி, எளிய பிள்ளைகளின் வாழ்வு மலரப் பணியாற்றும் சிறந்த மனிதர் ஒருவரை பெங்களூருவில் சந்தித்தோம். அவர் பெயர் ராஜகோபாலன் பாபு. ஒரு கணினி மென் பொருள் நிறுவனத்தை பெங்களூரில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். மேலைநாடுகளிலும் இவரின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? மேலும் படிக்க அ 74 சக்தி விகடன் 7.1.2025